குப்பிழானில் நாளை சனிக்கிழமை (11.01.2025) ஒரேநாளில் மூன்று இடங்களில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் நாளை சனிக்கிழமை காலை-06 மணியளவில் விசேட அபிஷேக வழிபாடுகளைத் தொடர்ந்து திருவாசக முற்றோதல் நிகழ்வு இடம்பெற்றுத் தொடர்ந்து மதியம் மகேஸ்வர பூசை (அன்னதானம்) இடம்பெறும்.
குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நாளை சனிக்கிழமை அதிகாலை-05 மணி முதல் நண்பகல்-12 மணி வரை இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.
இதேவேளை, குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திலும் நாளை காலை முதல் திருவாசக முற்றோதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது.
Post a Comment