சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய கும்பாபிஷேக பெருவிழாவுக்கு நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை

 

குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் மஹா கும்பாபிஷேகம் தொடர்பாகவும், ஆலயத்தில் செய்ய வேண்டியுள்ள புனருத்தாரண வேலைகள் தொடர்பாகவும் கலந்துரையாடும் நோக்கிலான விசேட பொதுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (17.01.2025) மாலை-05.30 மணிக்கு ஆலய வெளிமண்டபத்தில் இடம்பெற்றது. 

குறித்த விசேட பொதுக் கூட்டத்தில் ஆலய பரிபாலன சபையினர், மஹோற்சவ உபயகாரர்கள், விசேட பூசை உபயகாரர்கள் மற்றும் மாதாந்த உபயகாரர்கள் ஊர்மக்கள் பங்கேற்றனர். 


ஆலய கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்தும் நோக்கில் அதற்கான நிதியுதவிகளை நேரடியாக ஆலய பரிபாலன சபையினரிடம் அல்லது ஆலய பரிபாலன சபையினால் நிர்வகிக்கப்படும்  மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்திற்கும் வைப்புச் செய்து அது தொடர்பிலான தகவல்களை வழங்கி பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆலய பரிபாலன சபையினர் கேட்டுள்ளனர். 

தொடர்புகளுக்கு,

தலைவர். 0772878097

பொருளாளர். 0777861587

செயலாளர். 0770587174


தகவல் - ஜீவிதன் 

Post a Comment

Previous Post Next Post