முன்பள்ளிச் சிறார்களின் பங்கேற்புடன் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா

 

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா தைப்பொங்கல் திருநாளான செவ்வாய்க்கிழமை (14.01.2025)  முற்பகல்-10 மணி முதல் மேற்படி சனசமூக நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது. 


குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத் தலைவர் சுப்பிரமணியம் சுதாகரன் தலைமையில் சனசமூக நிலைய முன்றலில் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட குப்பிழான் விக்கினேஸ்வரா முன்பள்ளிச் சிறார்கள் மற்றும் சனசமூக நிலைய நிர்வாகம் நடாத்தும் பல வகுப்புக்களிலும் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஆகியோரிடையே தனித்தனியாகப் போட்டிகள் நடாத்தப்பட்டன.  


இறுதியில் நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்கள், மாணவர்கள் அனைவருக்கும் ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டன.  

இதற்கான நிதி அனுசரணையைப் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்ந்துவரும் குப்பிழானைச் சேர்ந்த நாகநாதர் பாலசுப்பிரமணியம் வழங்கியிருந்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது. 


மேற்படி விழாவில் குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் செயலாளர் அம்பிகைபாகன் ஜீவிதன், குப்பிழான் விக்கினேஸ்வரா முன்பள்ளி ஆசிரியைகளான திருமதி.மலர்விழி, திருமதி. புஸ்பராணி, முன்பள்ளிச் சிறார்கள், மாணவர்கள் மற்றும் கிராமத்தவர்கள் எனப் பலரும் கலந்து  கொண்டிருந்தனர்.          

(செ.ரவிசாந்)








Post a Comment

Previous Post Next Post