2025 கல்வியாண்டில் குப்பிழான் விக்கினேஸ்வராவில் சேர்கின்ற மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்துக்கு

 


2025 ஆண்டு புதிய கல்வியாண்டில் எமது ஊர் மாணவர்களை குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இணைத்துக் கொள்ள பெற்றோர்கள் முன்வர வேண்டும். 

இப்போது கல்வி, விளையாட்டு, கலை, கலாசார நிகழ்வுகள் என பல்வேறு துறைகளிலும் முன்னேறி வரும் குப்பிழான் விக்கினேஸ்வராவின்  எதிர்கால இருப்புக்கும், வளர்ச்சிக்கும் புதிய மாணவர்களின் இணைவு என்பது முக்கியமானது. 

ஏற்கனவே வடமாகாண நிலையிலும் எமது பிரதேசங்களிலும் மாணவர்கள் குறைந்து செல்லும் பல பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. அப்படியான நிலைமை எமது கிராமத்து பாடசாலைக்கும் நேரக் கூடாது. 

ஆகவே எமது பாடசாலையில் இணையும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புதிதாக 2025 ஆம் கல்வி ஆண்டில் இணையும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 25000 ரூபா பணத்தொகை அவர்களின் பெயர்களில் வைப்பிலிடப்படும் 5000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்படும் .

குறித்த விடயத்துக்கு குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் அமைப்பு மற்றும்  இராமநாதன் மோகன், திருமேனி பஞ்சாட்சரதேவன் ஆகியோர் அனுசரணை வழங்குகிறார்கள். கல்வி சார்ந்தும் பல்வேறு திட்டங்கள் பாடசாலையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. 

எமது கிராமத்தின் எந்தவொரு கல்வி சார்ந்த உதவித் திட்டமாக இருந்தாலும் குப்பிழான் விக்கினேஸ்வராவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.   

குப்பிழான் விக்கினேஸ்வராவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வியில் மேம்படும் வகையில் பல்வேறு உதவிகளையும் எமது புலம்பெயர் உறவுகள் வழங்கி வருகிறார்கள். 

எமது பாடசாலை பலமாகும் போது கிராமமும் வலுவாகும். 

Post a Comment

Previous Post Next Post