விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தில் இலவசமாக நடாத்தப்படும் கலை - மொழி வகுப்புகள்

 

மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு 

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்  கனடா - குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையமும் இணைந்து எமது கிராமத்து மாணவர்களின் நலன்கருதி பல்வேறு வகுப்புகளையும் இலவசமாக நடாத்தி வருகின்றது. 

விக்கினேஸ்வரா சனசமூக நிலைய கட்டிடத்தில் கலை வகுப்புகளான சங்கீதம், மிருதங்கம், வயலின் ஆகியவையும் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழி சார்ந்த வகுப்புகளும் வாரத்தில் ஏழு நாட்களும் நடைபெற்று வருகின்றன. 


இன்றைய நெருக்கடிமிக்க உலகில் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு தங்களுக்கு பிடித்த கலை தொடர்பிலான வகுப்புகளில் அவதானம் செலுத்துவது அவர்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இன்றைய போட்டிக் கல்வி நிலையில் மொழித் தேர்ச்சி என்பது முக்கியமானது. 

எனவே இவற்றை கருத்தில் கொண்டு கிராமத்து பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு நடாத்தப்படும் கலை, மொழி வகுப்புகளிலும் தங்கள் பிள்ளைகள் பங்கேற்பதனை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். 

மாணவர்களின் நலன்கருதி குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம் - விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்  கனடா ஆகியவற்றால் நடாத்தப்படும் குறித்த வகுப்புகள் மென்மேலும் வளர்ச்சியடைந்து சிறப்பாக வளர வாழ்த்துகள். 

வகுப்புகளுக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. 


வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளை பங்கேற்க வைக்க விரும்பும்   பெற்றோர்கள் பின்வரும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்த முடியும். 

சுதா - 077 830 6716 (தலைவர் - குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்)

ஜீவிதன் - 077 339 4457 (செயலாளர் - குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்)



Post a Comment

Previous Post Next Post