கன்னிமாரில் கருங்கல்லில் அமையவுள்ள மூலஸ்தானம், மஹாமண்டபம், தரிசன மண்டபம்! அடிக்கல் நாட்டும் வைபவம் நாளை

 

குப்பிழான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைய இருக்கும் கருங்கல்லிலான மூலஸ்தானம், மஹாமண்டபம், தரிசன மண்டபம் (வில்லு மண்டபம்) ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும்  வைபவமானது 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் இடம்பெற இருக்கிறது. 


இந்நிகழ்வானது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினுடைய தலைவரும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமாகிய கலாநிதி ஆறு திருமுருகன் ஐயா அவர்களுடைய பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் எம்மண்ணில் வாழும் அம்பாளின் அடியார்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


மேலும், மூலஸ்தானம், அர்த்தமண்டப கருங்கல் வேலை திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்க விரும்புவோர் ஆலய பரிபாலன சபையினரை தொடர்பு கொள்ள முடியும். 

தலைவர்:- +94771290359

செயலாளர்:- +94776639920

பொருளாளர்:- +94768713364


ஆலயத்தின் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், தரிசன மண்டபம் ஆகியவை அமைப்பதற்கான அத்திவாரக்குழிக்கான நாள் மண் எடுக்கும் நிகழ்வு கடந்த 30.08.2024 வெள்ளிக்கிழமை அன்று ஆலய பிரதமகுருவின் தலைமையில் ஆலயபரிபாலனசபையினர், ஊர்மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. 


கன்னிமார் ஆலயம் தொடர்பிலான பல்வேறு தகவல்களையும் அம்பாளின் உத்தியோகபூர்வ முகநூல் ஊடாக உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். 

கன்னிமார் அம்பாளின் முகநூலுக்கு செல்ல கீழ்வரும் இணைப்பை அழுத்தவும்... Kannimar Gowri Ambal / கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயம்

Post a Comment

Previous Post Next Post