குப்பிழானில் 150 ஆண்டுகள் பழமையான அரச மரம் சரிந்தது!

 


குப்பிழான்  சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் முன்பாக இருந்த 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு  சரிந்து விழுந்துள்ளது.    


கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இரவு வேளையில் குறித்த  அரசமரம் முறிந்து விழுந்துள்ளதால் பாரிய அனர்த்தம் நிகழவில்லை. 


அரசமரம் இருந்த இடத்தின் அருகே குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்  அமைந்துள்ளது.  இந்நிலையில் இந்த  அரசமரம் பாடசாலை நோக்கி விழுந்துள்ளதால் மதில், கூரை உள்ளிட்ட பாடசாலையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

                                                


மரம் விழுந்த பகுதியில் பாடசாலை மற்றும் பிரதான வீதி இருப்பதால்  மரத்தினை அகற்றும் பணிகள் துரித கதியில் இடம்பெற்றுள்ளது.



Post a Comment

Previous Post Next Post