குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் அறநெறிக் கருத்துரையும் கூட்டுப் பிரார்த்தனையும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (13.10.2023) மாலை-04 மணி முதல் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவச் சிறார்கள் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆச்சிரமப் பொறுப்பாளர் எஸ்.சிறிதரன் மற்றும் ஊடகவியலாளர் செ.ரவிசாந் ஆகியோர் மாணவர்களுக்கான அறநெறிக் கருத்துரைகளை நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து கருத்துரைகளிலிருந்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுச் சரியாகப் பதிலளித்த மாணவர்களுக்குப் பாராட்டுக்களும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment