யாழ்ப்பாணம் - பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தின் 43 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகமும் பலாலி வடக்கு உறவுப்பாலமும் இணைந்து பலாலியின் கிரீடம் என்கிற அணிக்கு 7 பேர் கொண்ட மாவட்டமட்ட உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரை நடாத்தி வருகிறது.
இன்றைய (03.07.2023) போட்டியில் மணற்காடு அன்ரனிஸ் எதிர் குப்பிழான் விக்னேஸ்வரா அணி மோதியது. ஆட்ட நேர முடிவில் குப்பிழான் விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
குப்பிழான் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த கோகுலன் இப் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்ரீமுருகனுடன் மோதி 3 கோல்களை அடித்த விக்கினேஸ்வரா
அதேவேளை 05.07.2023 ஸ்ரீமுருகன் வி. க எதிர் குப்பிழான் விக்னேஸ்வராவுடன் மோதியது. ஆட்ட நேர முடிவில் குப்பிழான் விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
குப்பிழான் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் சார்பில் கோல் அடித்தவர்கள்,
கிஷாந் - 02, வஜீபன் - 01
இப் போட்டியின் நாயகனாக குப்பிழான் விக்னேஸ்வரா அணியின் கிஷாந் தெரிவு செய்யப்பட்டார்.
Post a Comment