மறைந்த பிரபல எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் ஓர் இலக்கியக்காரனின் வாழ்வனுபவங்கள் மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி.புனிதவதி சண்முகனின் ஆனந்தக் கூத்து நாட்டிய நாடகத் தொகுப்பு ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (14.07.2023) மாலை-03.30 மணி முதல் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மஹால் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்.எஸ். சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்வில்
யாழ்.வேலணை மத்திய கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் சி.கிருபாகரன் வாழ்த்துரை ஆற்றினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். இரண்டு நூல்களையும் பேராசிரியர்.சிவலிங்கராஜா வெளியிட்டு வைக்க ஓர் இலக்கையக்காரனின் வாழ்வனுபவங்கள் நூலின் முதற்பிரதியை மூத்த எழுத்தாளர் அ.யேசுராசாவும், ஆனந்தக் கூத்து நூலின் முதற் பிரதியை யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் திருமதி.ரவீந்திரகுமார் செல்வநாயகியும் சம்பிராதயபூர்வமாகப் பெற்றுக் கொண்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான தி.செல்வமனோகரன், கலாநிதி.கந்தையா ஸ்ரீகணேசன் மற்றும் குருஷேத்திரம் நடனாலய இயக்குனர் கலாபூஷணம். செல்வி.பேரின்பநாயகி சிவகுரு ஆகியோர் நூல் நயப்புரைகளை நிகழ்த்தினர்.
மேற்படி நிகழ்வில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களான கவிஞர்.சோ.பத்மநாதன், வடகோவை வரதராஜன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார், இலக்கிய ஆர்வலர்கள், குப்பிழான் கிராமத்தவர்கள் என நூற்றிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
செ. ரவிசாந்-
Post a Comment