பிரபல எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகலிங்கன் காலமானார்

 


யாழ்.குப்பிழானைப் பிறப்பிடமாகவும், மாணிக்கவளவு கரணவாய் தெற்கு கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஆசிரியர் குப்பிழான் ஐ. சண்முகலிங்கன் (ஓய்வுநிலை ஆசிரியர் - நெல்லியடி மத்திய கல்லூரி) அவர்கள் இன்று திங்கட்கிழமை (24.04.2023) அதிகாலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஐயாத்துரை- இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், புனிதவதியின் (ஓய்வுநிலை ஆசிரியர் (அம்பாள் ரீச்சர்) - உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) பாசமிகு கணவரும்,
சுகன்யாவின் அன்புத் தந்தையாரும், செந்தூரனின் (ஆசிரியர் - கனகராயன்குளம் மகாவித்தியாலயம்) அன்பு மாமனாரும் ஆவார்.
குமாரலிங்கம், மணிமேகலை, முருகலிங்கம், ரூபாவதி, சுந்தரவதனி, காலஞ்சென்ற கந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் இன்று நண்பகல்-12 மணியளவில் கரணவாய் தெற்கு கரவெட்டி மாணிக்கவளவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து பிற்பகல்-2 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுத் தொடர்ந்து தகனக் கிரியைகள் பூவரசந்திட்டி மயானத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:-
0776158894 (புனிதவதி (மனைவி)



Post a Comment

Previous Post Next Post