குப்பிழான் காடாகடம்பை இந்துமயான சூழலில் குறிப்பாக பாதையோரங்களில் காணப்பட்ட பற்றைகள், திண்மக்கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு கடிதம் மூலம் அறிவித்து அவர்களின் ஒத்துழைப்புடனும் ஊரில் உள்ள இளையோர்கள், பெரியவர்களையும் இணைத்து கூட்டான சிரமதான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளின் துர்நாற்றத்தால் இறுதி தகனத்துக்காக மயானத்துக்கு வருபவர்களும், அப்பாதையால் பயணம் செய்யும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வந்தனர்.
குப்பிழானில் வாழ்ந்து வரும் இளைஞரான ஜீவிதன் இந்தப் பணியை சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளார்.
மேலும் சட்டவிரோதமாக அப்பிரதேசங்களில் கொட்டப்படும் கழிவுகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
Post a Comment