கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல்



குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (08.01.2023) காலை-06 மணிக்கு ருத்ர அபிஷேகம், பூசையுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வில் மேற்படி ஆலயத் தலைவர் செ.நவரத்தினராசா, சைவப்புலவர் கந்த சத்தியதாசன் மற்றும் ஆலயத் தொண்டர்கள், அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பக்திபூர்வமாக திருவாசகத்தை முற்றோதினர்.

பிற்பகல்-01 மணியளவில் திருவாசக முற்றோதல் நிறைவுற்றதைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)       

Post a Comment

Previous Post Next Post