மாதாஜி அம்மையார் நினைவு தியான மணிமண்டப அடிக்கல் நாட்டும் நிகழ்வு

 


வாழ்வின் எல்லை வரை தூய துறவறம் காத்த ஈழத்தின் மூத்த ஆன்மீகவாதியும், பெண் புலவருமான விசாலாட்சி மாதாஜி அம்மாவின் சைவத்தமிழ்ப் பணிகளைக் கெளரவிக்கும் வகையில் அவர் வாழ்ந்த குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயச் சூழலில் மாதாஜி அம்மா ஞாபகார்த்த தியான மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை (15.12.2022) பிற்பகல்-12.30 மணியளவில் குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயத் தலைவர் கந்தையா சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் கிராமத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் ஆசி உரை ஆற்றியதுடன் வாழ்த்து உரைகளும் இடம்பெற்றன.


மேற்படி நிகழ்வில் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத் தலைவர் எஸ்.சின்னராசா, குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய முன்னாள் தலைவரும், ஓய்வுநிலைக் கிராம சேவகருமான சோ.பரமநாதன், குப்பிழான் வடக்கின் ஓய்வுநிலைக் கிராம சேவகர் செ.ஞானசபேசன், குப்பிழான் விவசாய சம்மேளனத் தலைவர் செ.நவரத்தினராசா, ஊர்காவற்துறைப் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும், குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவருமான பொ.சந்திரவேல், ஏழாலை சைவமகாஜன வித்தியாலய அதிபர் க.கஜேந்திரன், மாதாஜி அம்மையாரின் பெறாமகன் கணபதிப்பிள்ளை தேவராசா மற்றும் உறவுகள், கிராமத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மாதாஜி அம்மா ஞாபகார்த்த தியான மண்டபம் அமைப்பதற்கு வெளிநாட்டு, உள்நாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி உதவி கோரப்பட்டுள்ளது.


(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

Post a Comment

Previous Post Next Post