குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய ஏற்பாட்டில் மரநடுகை

 


எமது சுற்றாடலை பசுமையாக்கும் நோக்கில் குப்பிளான் தெற்கு குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆண்டும் மர நடுகை செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

எம் மண்ணின் மரங்களான இலுப்பை, மருது, சமண்டலை, தேக்கு, புங்கன் ஆகிய மரக்கன்றுகள் கன்னிமார் ஆலய சுற்றாடலில் 12.12.2020 சனிக்கிழமை நாட்டப்பட்டுள்ளன. 



ஏற்கனவே கன்னிமார் ஆலய சூழலில் பல்வேறு வகையான மரங்களும் கன்னிமார் ஆலய நிர்வாகத்தினரால் நாட்டப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வளர்ந்து  வருகின்றன.

கடந்த ஆண்டும் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய ஏற்பாட்டில் கன்னிமார் ஆலய சுற்றாடலில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   


வருங்காலத்தில் கன்னிமார் ஆலய சூழல் இன்னொரு சோலையம்மனாக மாறும் என்பதில்  ஐயமில்லை.



Post a Comment

Previous Post Next Post