குப்பிழான் வீரமனை நாயகி கெளரியம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற சப்த கன்னியர் சந்நிதானத்திற்கும், அம்பிகை வசந்த மண்டப கலசத்திற்கும் நாளை-04 ஆம் திகதி திங்கட்கிழமை காலை -10 மணி தொடக்கம் 10.45 வரையான சுப முகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.
கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த சனிக்கிழமை அதிகாலை- 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது. இன்று-03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை -9 மணி தொடக்கம் மாலை -5 மணி வரை அடியார்கள் எண்ணைக் காப்புச் சாத்தும் வைபவம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் நூற்றுக் கணக்கான அடியார்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டு சப்த கன்னிகைகளுக்கு எண்ணைக் காப்புச் சாத்தினர்.
கும்பாபிஷேக தினமான நாளை திங்கட்கிழமை காலை-8 மணிக்கு விநாயகர் வழிபாடு, அதனைத் தொடர்ந்து யாகபூஜை, மகா பூர்ணாகுதி, அந்தர் பலி, சர்வமங்கள வாத்திய சகிதம் , பிரதான கும்ப கூத்தாபனம், முற்பகல்-10.15 மணிக்குத் தூபி அபிசேகம் அதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம், தசதர்சனம், ஆசாரிய சம்பாவனை, மஹா அபிஷேகம், விஷேட பூஜை, அம்பாள் வலம் வரும் திருக் காட்சியும்,பிரசாதம் வழங்கலும் நடைபெறும்.
கும்பாபிஷேக பிரதிஷ்டா சிவாச்சாரியர்
சிவஸ்ரீ . சாம்பசதா சிவ.சோமதேவக் குருக்கள் (நீர்வேலி)
சிவஸ்ரீ சி. கிருஷ்ணசாமிக்குருக்கள் (புன்னாலைக் கட்டுவன்)
சாதகாசிரியர் - சிவஸ்ரீ .கி. சோதிஸ்வரக்குருக்கள்
(ஊரெழு )
வேதபாராயணம் :- பிரம்ம ஸ்ரீ கி. பிரணவசர்மா
பிரம்மஸ்ரீ சோ. தேவநாத சர்மா
பிரம்மஸ்ரீ கி.ஹரிகரசர்மா
பிரம்மஸ்ரீ. ஹரீஸ்சர்மா
செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள் :- செ .ரவிசாந்.
Post a Comment