சொக்கவளவு சோதி விநாயகர் அறநெறிப்பாடசாலைக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைத்த கஜதீபன்

 


குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் அறநெறிப்பாடசாலைக்கு  50 ஆயிரம் ரூபா  பெறுமதியான தளபாடங்கள் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

 2015ஆம் ஆண்டுக்கான  தனது குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி உதவியை அவர் வழங்கி வைத்தார். நிகழ்வில் வட  மாகாணசபை உறுப்பினருடன் அறநெறிப்பாடசாலையின் ஸ்தாபகர் புலவர் விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் மற்றும் அறநெறிப் பாடசாலையின் தலைவர் ஆசிரியர் கந்தையா  சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


குறித்த அறநெறிப் பாடசாலை குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயத்துக்கு  அருகாமையிலுள்ள மணிமண்டபத்தில் இயங்கி வருகிறது. வெள்ளிதோறும் இந்த அறநெறிப் பாடசாலை இடம்பெற்று வருகிறது.

அறநெறிப் பாடசாலையில்  தளபாட வசதிகள் இல்லாத காரணத்தால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந் நிலையில் அறநெறிப் பாடசாலையின் தலைவர் வடமாகாண சபை உறுப்பினரிடம் மாணவர்கள் சார்பாக விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த தளபாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர்.

செய்தித் தொகுப்பு : செ -ரவிசாந்

Post a Comment

Previous Post Next Post