குப்பிழான் தனிக்கிராமமாக உழைத்த தம்பு தர்மலிங்கம் காலமானார்


 1964 ஆம் ஆண்டு குப்பிளான் கிராமம் தனிக் கிராமம் ஆவதற்கு முன்னின்று உழைத்தவரும் குப்பிளான் கிராமத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவருமான சமூக சேவகரும், சமாதான நீதவானுமான தம்பு தர்மலிங்கம்  15 ஆடி 2015 புதன்கிழமை  தனது 90 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இன்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெற்று நண்பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.


குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் தலைவர் என்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும் முன்னாள் பாலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், முன்னாள் அதிபரும் குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவருமான எஸ் குணலிங்கம், குப்பிளான் தெற்கின் முன்னாள் கிராம சேவகரும் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய பரிபாலன சபைத் தலைவருமான சோ .பரமநாதன், கட்டுவன் கிராமத்தின் ஓய்வு நிலைக் கிராம சேவகர் க.கனகநாயகம், அன்னாரின் உறவினரான நாகலிங்கம் ஆகியோர் அஞ்சலி உரைகள் ஆற்றினர். 



இதன்போது அஞ்சலி உரைகள் ஆற்றிய அனைவருமே அவர் குப்பிளான் கிராமத்துக்குச் செய்த சேவைகள் தொடர்பில் மெச்சிப் பேசினர்.

அதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக குப்பிளான் காடகடம்பை இந்து மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்றனர்.


அன்னாரின் அளப்பரிய சேவைகளுக்காக குப்பிளான் கிராம ஜோதி, செம்மண் சுடர் முதலிய பல விருதுகள் வழங்கிக் கெளரவிக்க்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள் : எஸ் .ரவி-


மரண அறிவித்தல் 

திரு தம்பு தருமலிங்கம்



(செம்மண் சுடர்(சமாதான நீதவான்), முன்னாள் எழுதுவினைஞர்- மன்னார் நகரசபை, கிராம சமூகபணியாளர்- குப்பிளான்)

அன்னை மடியில் : 8 மார்ச் 1925 — ஆண்டவன் அடியில் : 15 யூலை 2015

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பு தருமலிங்கம் அவர்கள் 15-07-2015 புதன்கிழமை அன்று குப்பிளானில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமணி(முன்னாள் ஆசிரியை- பலாலி சித்தி விநாயகர் வித்தியாசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரி(கெளரி- பிரித்தானியா), யோகேஸ்வரி(கருணா- பிரான்ஸ்), ரதீஸ்வரி(கலா- கனடா), தனேஸ்வரி(தனம்- இலங்கை), மகேஸ்வரி(உமா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், பூமணி, மற்றும் தங்கரத்தினம்(பிரான்ஸ்), தர்மபூபதி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபாலன்(பிரித்தானியா), திருக்குமார்(பிரான்ஸ்), ஜெயேந்திரன்(கனடா), சிவகுமார்(இலங்கை), காலஞ்சென்ற கந்தகுமார்(கந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நவரத்தினம், துரைராசா, மற்றும் கண்மணி, சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிதரன், தர்மினி, தர்சிகா(பிரித்தானியா), அனுசியா, தவறூபன், கபிலன்(பிரான்ஸ்), ஜெயகிருஸ்னன், சுலக்சிகா, சக்திகா(கனடா), சிவதர்சன், சிவபிரசன்னா, சிவேந்தரன்(குப்பிளான்), கரிஸ்மா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் கடகாம்பிரை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

ஜெயேந்திரன் — கனடா

தொலைபேசி: +12898011775

செல்லிடப்பேசி: +16477863783


திருக்குமார் — பிரான்ஸ்

தொலைபேசி: +33952690882


ஜெயபாலன் — பிரித்தானியா

தொலைபேசி: +442085749176


சிவகுமார் — இலங்கை

தொலைபேசி: +94212059356


மகேஸ்வரி(உமா) — கனடா

செல்லிடப்பேசி: +16479777592








Post a Comment

Previous Post Next Post