வயாவிளான் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் 3 ஏ பெற்ற குப்பிழான் மாணவனுக்கு தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிப்பு

 


யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா  ஞாயிற்றுக்கிழமை (02.11.2014) கல்லூரியின் ஆ.சி.நடராஜா அரங்கில் வி.ரி.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கடந்த 2012 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர வர்த்தகப் பிரிவில் 3ஏ பெற்றுக் கல்லூரிக்குச் சமூகத்திற்கும் தான் பிறந்து வளர்ந்த குப்பிழான் மண்ணிற்கும் பெருமை சேர்த்த மாணவன் இ.தனுசன் கல்லூரிச் சமூகம் சார்பாகத் தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் குறித்த தங்கப் பதக்கத்தை அணிவித்துக் கௌரவித்தார்.


அத்துடன் கனடா வாழ் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் இ.தனுசன் உட்பட பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான ஏனைய மாணவர்களும் பணப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


‘விடாமுயற்சி வெற்றியின் திறவுகோல்’ இதற்குத் தனுசன் சிறந்ததொரு முன்னுதாரணம். சிறுவயதில் தந்தையை இழந்த போதும் தாயின் அன்பிலும் அர்ப்பணிப்பிலும் கல்வியிலுள்ள தடைகளை உடைத்தெறிந்து உயர் கல்வியில் சாதனை படைத்த மாணவனின் சாதனைப் பயணம் தொடர பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது. 

செய்தி மற்றும் படங்கள்: ரவி

Post a Comment

Previous Post Next Post